மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் நேற்று 13பேருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் அக்கரைப்பற்றில் 10பேரும்,காத்தான்குடியில் இருவரும் சாய்ந்தமருதில் ஒருவரும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
அக்கரைப்பற்று சந்தையில் எதேச்சையாக இருபது பேருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளின் போதே 10பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் , வைரஸின் தாக்கத்தின் செறிவு அதிகரித்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுவதுடன், இன்று அக்கரைப்பற்றுக்கு விசேட தொற்று நோயியல் பிரிவினரும் விஐயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.