சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை செய்ய முடியுமா அல்லது அதற்கு தடை உத்தரவு நீடிக்கப்படுமா என்ற முல்லைத்தீவு மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு மிக்க தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வழங்கப்பட உள்ளது
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றுஇ கடந்த 20.11.2020 அன்றுஇ மாவீரர் தினம் மேற்கொள்வதற்கு 46 பேருக்கு தடை உத்தரவினைப் பிறப்பித்திருந்தது.
இவ்வாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட தடைக்கட்டளையை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி இ தடைக்கட்டளை வழங்கப்பட்டவர்கள் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜாஇ முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட பதின்நான்கு பேர் கொண்ட குழுவினரால் 23.11.2020 நகர்த்தல் பத்திரம் (மோசன்)தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் 23.11.2020 அன்று இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணைகளில் மாவீரர் நாளுக்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டோருக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்இ புரந்திரன் எஸ்.தனஞ்சயன்இ ருஜிக்கா நித்தியானந்தராஜாஇ திருமதி துஷ்யந்தி சிவகுமார்இ ஹாரிஸ்இ உள்ளிட்ட சட்டவாளர்கள் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்படடவர்கள் சார்பாக மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை கேட்ட நீதிபதி வழக்கின் கட்டளையை வழங்க வழக்கினை இன்றைய திகதிக்கு தவணையிட்டுள்ளார்.
இந்நிலையில் கொழும்பிலிருந்து விமானம் மூலம் வருகைதந்த சட்டமா அதிபர் திணைக்கள சிரேஸ்ர சட்டத்தரணிகள் மூவர் முன்னாள் பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான ருவன் குணசேகர உள்ளிட்டவர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பொலிஸ் உயரதிகாரிகள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோர் குறித்த ஆறு வழக்குகளையும் நகர்த்தல் பத்திரம் (மோசன்) தாக்கல் செய்யப்பட்டு நேற்று (24.11.2020) திறந்த நீதிமன்றிலே குறித்த நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்படக்கூடாதுஇ தடையுத்தரவு நீடிக்கப்பட வேண்டும் என்ற தமது தரப்பு நியாயங்களை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த வழக்குகளின் கட்டளையை ஏற்கனவே தெரிவிக்கப்பட்டபடி இன்று வழங்குவதாக நீதிபதி அறிவித்திருந்தார்
இந்நிலையில் இந்த வழக்கின் உடைய கட்டளை இன்னும் சற்று நேரத்தில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உள்ளமை குறிப்பிடத்தக்கது