பொன்ஆனந்தம்
திருகோணமலை திருக்கடலூர் விஜிதபுரவைச்சேர்ந்த மீனவர் ஒருவர்படகு கவிழ்ந்ததில் கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்;
இன்று அதிகாலை 5.30 மணியளவில் திருகடலூர் கிராமத்தில் இருந்து நான்கு மீன்வர்களுடன் மீன்பிடிக்காகச் சென்ற படகு சற்றுத் தொலைவில் கடல் அலையில் சிக்குண்டு கவிழ்ந்ததனால் இந்நிலமை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.
பின்னர் ஏனைய சக படககளின் உதவியுடன் கடலில் மூழ்கி மரணமானவரின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியமனை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது. மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
குறித்த பிரதேசத்தில் இருந்து தற்போதைய புயல் அச்சம் காரணமாக எவரும் கடலுக்குச்செல்ல வில்லை என சக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இறந்தவர் விஜிதபுரத்தைச்சார்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான ஜே.ஏ.ஜனா(43) எனவும் தெரிய வருகின்றது.