கொரோனா கருதி மோட்டார் வாகன கருமபீடம் சம்மாந்துறையில் திறப்பு!

(காரைதீவு  நிருபர் சகா)

கிழக்கு மாகாண மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அனுசரணையுடன் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளை கொரோனா கருதி பொது மக்களுக்கு வழங்கும் கருமபீடம் ஒன்று நேற்று சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் திறந்துவைக்கப்பட்டது.

கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்படும் இந்த காலகட்டத்தில் பொது மக்களுக்கு சுகாதார நடைமுறைகளை பேணி சிரமமின்றி கடமைகளை முடித்துக் கொள்ளக் கூடியவாறு இலகுவாக அணுகக் கூடிய முறையில் இதனை அமைத்திருப்பது விஷேட அம்சமாகும்.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ் .எல். எம் .ஹனிபா  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளர் எம். ஐ. எம் .முஸ்தபா, பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் எம் .ஐ .றபீக், உதவி பிரதேச செயலாளர் எம். எம். ஆஷிக் ,கணக்காளர் ஐ. எம். பாரிஸ் மற்றும் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.