நீதிமன்ற கூண்டில் இருந்தவர் தப்பியோட்டம்

(வாஸ் கூஞ்ஞ)
போதை வஸ்து தொடர்பாக மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற குற்றவாளி கூண்டில் அடைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் தப்பியோட்டம். அவரை தேடிப் பிடிப்பதில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ் சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது செவ்வாய் கிழமை (24.11.2020) மன்னார் பொலிசார் மன்னார் உப்புக்குளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இரண்டரை கிராம் ஹரோயின் என்ற போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்ததாக தெரிவித்து மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி மாணிக்கவாசகர் கணேஸ்ராஜர முன்னிலையில் ஆஐர் செய்திருந்தனர்.
இவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கும்படி நீதவானின் கட்டளையை அடுத்து இவ் நபர் நீதிமன்ற குற்றவாளி கூண்டில் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்வதற்காக அடைக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவுற்றதும் பிற்பகல் இரண்டு மணியளவில்  இவ் சந்தேக நபருக்கு அவரின் சகோதரிகளால் கொண்டுவரப்பட்ட உணவை வழங்குவதற்கு கூண்டு கதவை திறந்ததும் இவ் சந்தேக நபர் அதில் நின்றவர்களை தள்ளிவிட்டு தப்பியோடியுள்ளார்
இவர் தப்பியோடும் வேளையில் நீதிமன்றுக்குள் கூக்குரல் கேட்கவே மன்றுக்கு வெளியில் நின்றவர்கள் மன்றுக்குள் ஓடத்தொடங்கியதாகவும்
பின் இவரை துரத்தி பிடிப்பதில் பொலிசார் சிறைச்சாலை உத்தியோகத்தர் மற்றும் அதில் நினறவர்கள் முயன்றபோதும் இவ் கைதி நீதிமன்ற வளாக சுவர் மேல் ஏறி பாய்ந்தவராக அவரின் கிராமம் அமைந்துள்ள பக்கமே தப்பியோடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கூண்டுக்குள் இருந்தபோது போதை வஸ்து தாகத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது