திருமலையில் ஆட்டோமிது விழுந்த பாரிய மரம் 03பேர் காயம்.

பொன்ஆனந்தம்

திருகோணமலையில் இன்று மாலை 4.30மணியளவில் பேய்ந்த தொடர் மழைகாரணமாக உப்புவெளி பகுதியில் பாரியமரமொன்று விழுந்ததில் ஆட்டோ ஒன்று மோசமாக சேதமானதுடன் அதில் பயணம் செய்தவர்கள் இருவர்வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் உப்புவெளி மின்சார சபைக்கருகில் நிகழ்ந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்
கடும் மழைகாரணமாக வீதிக்கு அருகில் நின்ற பெரிய மரமொன்று விதியால் சென்ற ஆட்டோவின் மீது விழுந்ததல் இவ்வனர்த்தம் நிகழ்ந்ததாக பொலிசார் தெரிவித்தனர். சம்பவம் இடம்பெற்றதும் காயப்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் திருகோணமலை வைத்திய மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதனையடுத்து மரம் வெட்டி அகற்றப்பட்டது. கடும்மழையால் இந்நிலைமை ஏற்பட்டது.