சந்திரகாந்தன் வீதிக்கு அடிக்கல் நடுகை நிகழ்வு வைபவ ரீதியாக இன்று (22) அரசடித்தீவில் ஆரம்பிக்கப்பட்டது.
நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் வீதி புணரமைப்பு திட்டத்தின்
கீழ் முதன் முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேசத்தில் அரசடித்தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்ட “சந்திரகாந்தன்” வீதி புனரமைப்பிற்கான அடிக்கல் நடுகை செய்யப்பட்டது.
2020.11.22 ஞாயிற்று கிழமை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பரிந்துரையின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள வீதிகளில் முதற்கட்டமாக அரசடித்தீவு கிராமத்தில் சந்திரகாந்தன் வீதியானது, அபிவிருத்தி குழு இணைத்தலைவரது இணைப்புச் செயலாளர் மங்களேஸ்வரி சங்கர் அதிதியாக கலந்து கொண்டு வீதியை புனர் நிர்மாணம் செய்வதற்கான அடிக்கல் நாட்டு விழாவானது நடைபெற்றது. மேற்படி சந்திரகாந்தன் வீதியானது பல காலங்களாக யாராலும் கவனிக்கப்படாமால் காணப்பட்ட நிலையில் இந்த வீதியை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றமைக்கமைய தெரிவு செய்யப்பட்டு புனரமைக்கப்படும் வீதிக்கு அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் சி.புஸ்பலிங்கம், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பட்டிப்பளை பிரதேச அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ம.குகநாதன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிறைவேற்று பொறியியலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், TMVP இணைப்பாளர் சிறிக்காந்தன், வட்டார அமைப்பாளர் இ.ரமேஸ் அரசடித்தீவு கிராமிய அமைப்பாளர் புலக்சன், லிங்கேஸ், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.