ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதல் நாட்டில் தீவிரவாதத்தை பரப்புவதற்காக ஒரு சக்திவாய்ந்த நாடு அதன் முகவர்கள் மூலம் தொடங்கிய சதி என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
வெலிகடை ப சிறைச்சாலையில் நேற்று (21) ஸ்கைப் தொழில்நுட்பம் ஊடாக ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் அவர் சாட்சியமளித்தார்.
எம்.பி., எல்.ரீ.ரீ.ஈ உங்களை வடக்கிலிருந்து வெளியேற்றிய பின்னர் நீங்கள் ஐந்து வருடங்கள் அகதிமுகாமில் இருந்தீர்கள் என சொன்னீர்கள். நீங்கள் எப்படி அரசியலுக்கு வந்து இவ்வளவு பணக்காரர்களானீர்கள்? எனஆணைக்குழுவினர் வினவிய வினாவும் ரிசாட் பதியூதின் பதிலளித்துள்ளார்.