கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் இரண்டு மாணவர்களுக்கு கொரனா தொற்று.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் இரண்டு இறுதி ஆண்டு மாணவர்கள் கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனைத்துபல்கலைக்கழக மாணவர்  ஒன்றியம் தெரிவித்துள்ளது

மருத்துவ பீடத்தின் மாணவர்கள் தங்கியுள்ள இரண்டு விடுதிகள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு மற்றும் கொழும்பு பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளிட்ட அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக ஏராளமான மாணவர்கள் ஆபத்தில் உள்ளனர் என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.