மட்டு ஞானசூரியம் சதுக்கத்தில் ஒருவருக்கு கொரனா தொற்று.

 

மட்டக்களப்பு நகரில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

கடந்த 9ஆம் திகதி கொழும்பில் இருந்துவந்து சுயதனிமைப்படுத்தலில் இருந்த மட்டக்களப்பு- ஞானசூரியம் சதுக்கத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு  இனங்காணப்பட்டுள்ளார்
இத்தொற்றுடன் மட்டக்களப்பில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலானானோர் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.