வினாயகபுரத்தில் மகிழ்ச்சிமிகு மீன் அறுவடை!

(காரைதீவு  நிருபர் சகா)
 
திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட விநாயகபுரம்03 பகுதியில் நேற்று திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் மீன்அறுவடை நிகழ்வு மகிழ்சிகரமான சூழலில் நடைபெற்றது.

மீன் வளப்பு தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தினை மேன்படுத்துவதற்காக கிழக்கு மாகாண மீன் பிடிப்பணிப்பாளர் எஸ். சுதாகரனின் ஆலோசனைக்கு அமைய  விநாயகபுரம் 03 பகுதியில் தடாக மீன் வளர்ப்புத்திட்டத்தின் கீழ் 2020.07.15இல்  தடாகத்தில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

நான்கு  மாதத்திற்கு பிறகு  மீன் பிடி அறுவடை நிகழ்வு நேற்று  இடம்பெற்றது.

இவ் அறுவடையில் ஆரம்ப கட்டமாக 150கிலோ மீன் பிடிக்கப்பட்டு  விற்பனை செய்யப்பட்டது. மேலும் 2000கிலோ இருந்து 3000கிலோ மீன்கள் மேலதிக  அறுவடைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர்  த.கஜேந்திரன்  உதவிப்பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா நிருவாகஉத்தியோகத்தர் திருமதி ஜெயசுந்தரி கணேசராஜா கிழக்கு மாகாண மீன்பிடி பிரிவின்திருக்கோவில் பிரதேச நீரியல் வள அபிவிருத்தி உத்தியோத்தர் இரா.அபராஜிதன் திருக்கோவில் பிரதேச செயலக கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோத்தர் எஸ்..ரவீந்திரன் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்..