ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு மற்றும் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துக் காணப்படும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு புகை விசிறல் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் வழிகாட்டலில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர் தலைமையில் அதிக டெங்கு தாக்கம் காணப்படும் இடங்களிலுள்ள வீடுகளுக்கு டெங்கு புகை விசிறல் நடவடிக்கை இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
குறித்த டெங்கு புகை விசிறல் நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.