மன்னாரில் இன ஒற்றுமைக்கு தடையாக இருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன். அரச அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டிமெல்

????????????????????????????????????
( வாஸ் கூஞ்ஞ)
இன மத வேறுபாடின்றியே எனது சேவைகள் இடம்பெறும்.  இங்குள்ள மத இன வேறுபாடுகள் அனைத்தையும் எனது பதவி காலத்தில்  நீக்கியவளாகவே எனது பணியை நிறைவு செய்து செல்வேன். இதற்கு யாராவது தடையாக இருந்தாள் அல்லது இந்த ஒற்றுமையை யாராவது குழப்புவதற்கு முனைந்தால் எனது நடவடிக்கை மிகவும் கடுமையாக இருக்கும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் தனது பதவியை ஏற்றுக்கொண்டபின் திங்கள் கிழமை (16) மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலாளர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றுகையில்;.

இந்த மாவட்டத்தையும் இங்குள்ள மக்களையும் நான் உண்மையாக நேசிக்கின்றேன் என்றால் நான் இந்த மாவட்டத்துக்கு வருவேன் என உறுதியாக தெரிவித்திருந்தேன். அதுவும் தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனக்கு பல தடைகளும் சவால்கலும் இருந்தபோதும் இறைவன் என்னை கைவிடாது இவ் மாவட்டத்துக்கு பணி செய்ய அழைத்துள்ளார்.

இறைவன் என்மட்டில் சித்தம் கொண்டார் இதனால் ஒரு வீதம் தொடக்கம் நூறு வீதமானவர்களின் ஒத்துழைப்பு என் வருகைக்காக இருந்தது. அவ்வாறு இதே நூறு வீதமானவர்களின் ஒத்துழைப்பையும் நான் இவ்விடத்தில் காண்கின்றேன்.

நான் அரசாங்க அதிபருக்கான நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட தினம் எனது மகனின் இறந்த தினம் (ஒக்டோபர் 06) இவ்வாறு நான் அரசாங்க அதிபராக அனுமதிக்கப்பட்ட நாள் கத்தோலிக்க மக்கள் மரித்த சகல ஆத்துமாக்களை நினைவுகூறும் நாள்.

இறந்த ஆத்துமாக்கள் மற்றும் ஒவ்வொருவரினதும் பிராத்தனையுமே என்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது என்பது எனது நம்பிக்கையுமாகும்.
இங்குள்ள மக்கள் எனது சேவையை பெரிதாக எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் எனக்கு வழங்கப்பட்ட இந்த பதவி காலத்தில் எவ்வளவு செய்ய முடியுமோ அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற பெரிய பாரத்துடனே இங்கு வந்துள்ளேன்.

இவ்வளவு நன்மை செய்த இறைவன் இவ்வாழ் மக்களுக்கு எனது மூலம் சிற்ந்த நன்மை செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ஆகவே உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்புடன் எனது பணியை நல்லமுறையில் கொண்டு செல்வேன் என்பதும் எனக்குள்ள நம்பிக்கையாகும்.

நான் மன்னாரில் பணி செய்த காலத்திலும் நான் வெளி மாவட்டங்களில் பணி செய்த காலத்திலும் இங்குள்ள ஒவ்வொரு மதங்களைச் சார்ந்த மதப்பெரியார்கள் எனக்கு பல வழிகளிலும் அன்புக்கரங்கள் நீட்டியவர்கள். ஆகவே இவர்களின் அன்பும் ஆசீயும் தொடர்ந்து எனக்கு இருந்து வரும் என்பது எவ்வித ஐயமுமில்லை.

நான் இன மத என்ற எவ்வித பாகுபாடின்றி செயலாற்றுவேன். இங்குள்ள மத இன வேறுபாடுகள் அனைத்தையும் எனது பதவி காலத்தில்  நீக்கியவளாகவே எனது பணியை நிறைவு செய்து செல்வேன்.

இதற்கு யாராவது தடையாக இருந்தாள் அல்லது இந்த ஒற்றுமையை யாராவது குழப்புவதற்கு முனைந்தால் எனது நடவடிக்கை மிகவும் கடுமையாக இருக்கும்.

அரச ஊழியர்களாக இருக்கும் உங்கள் முகங்களில் மகிழ்ச்சிகளை காண்கின்றேன். நீங்கள் இங்கு முக மகிழ்ச்சியுடன் உங்கள் கடமைகளைச் செய்யலாம். அதற்கான சூழலை ஏற்படுத்தி தருவேன்.

ஆனால் நாம் ஒவ்வொருவரும் எமது சுயநலனுக்கு அப்பால் பொதுமக்களின் நலன்நோக்கி எமது சேவைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் நாம் இந்நேரத்தில் மறக்க முடியாது.

இப்பொழுதுள்ள காலங்களை நாம் ஒன்றும் சொல்ல முடியாத நிலையில் இருக்கின்றோம். தற்பொழுது நிரந்தரமற்ற வாழ்க்கையாக இருக்கின்றது. ஆகவே கிடைக்கும் நேரத்தை ஒரு நிமிடமாக இருந்தாலும் அவற்றை நாம் எம்மை நம்பி வாழும் மக்களுக்காக அர்ப்பணித்து சேவையாற்றுவதன் மூலம் இறைவனை நாம் சந்தோஷப்படுத்துவோம்.

இதனால் நாம் புண்ணியங்களை சம்பாதிக்க இது வழி சமைக்கப்படும். இங்கு நன்கு சேவை செய்யக்கூடிய நல்ல படையணி இருக்கின்றது. ஆகவே நாம் அனைவரும் ஒன்றுபட்டு பயணிப்போம் என இவ்வாறு கேட்டுக் கொண்டார்.