கிழக்கு மாகாண காணி ஆணைக்குழுவின் பணிப்பாளரை அச்சுறுத்திய ஒருவர் கைது (கனகராசா சரவணன்)

(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் உள்ள கிழக்கு மாகாண காணி ஆணைக்குழுவின்a அச்சுறுத்திய ஒருவரை  புதன்கிழமை(18) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்
குறித்த காரியலயத்திற்கு மட்டக்களப்பு செபஸ்தியார் வீதியைச் சேர்ந்த ஒருவர் சம்பவதினமான  புதன்கிழமை(18) சென்று காணி ஆணைக்குழுவின் பணிப்பாளரை சந்திக்வேண்டும் என காரியாலயத்தின் வரவேற்று பீட உத்தியோகத்தரிடம் தெரிவித்தார் இதனையடுத்து பணிப்பாளரை அனுகி சந்திப்பதற்கு ஒருவர் வந்துள்ளதாக தெரிவித்ததர் அதற்கு பணிப்பாளர் பொதுமக்களை சந்திக்கும் தினம் திங்கட்கிழமை அன்றுவருமாறு இன்று சந்திக்கமுடியாது என தெரிவித்தார்
அதன்பின்னர் குறித்த நபர் பணிப்பாளர் தன்னை வரச் சொன்னதாக தெரிவித்து தகவலை பணிப்பாளருக்கு தெரியப்படுத்தினார்  அதற்கு பணிப்பாளர் நான் யாரையும் வரச சொல்லவில்லை என்ற நிலையில் குறித்த நபர் பணிப்பாளரின் காரியாலய அறைக்குள் உள்நுழைந்து களுவங்கேணியிலுள்ள காணி பிரச்சனை தொடர்பாக கதைக்கவேண்டும் என்றுள்ளார்.
அப்போது பணிப்பாளர் அந்த காணி தொடர்பாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டு  அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் அதில் நான் ஒன்றும் செய்யமுடியாது என தெரிவித்துள்ளார் அதற்கு குறித்த நபர் அந்த காணி தொடர்பான விடயத்தில் விலகி இருக்குமாறும் ஏற்கனவே உங்களை யார் சுட்டது என்;றது தொடர்பான சிஜடி யினரில்  அறிக்கை என்னிடம் இருப்பதாக அச்சுறுத்தும் தொனியில் தன்;னிடம் தெரிவித்ததாக காணிசீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் பொலிஸ் நிலையத்திரல் முறைப்பாடு செய்துள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்
இதனையடுத்து பணிப்பாளரை அச்சுறுத்திய குறித்த நபரை நேற்று புதன்கிழமை மாலை கைது செய்தனர் .இதில் கைது செய்யப்பட்டவரை இன்று வியாழக்கிழமை (19) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.ஏ. றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்போது ஒரு இலச்சம் ரூபா ஆள் சரிரிப்பிணையில் பிணையில் விடுதித்து எதிர்வரும் ஜனவரி மாதம் 21 மட் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்