சமுர்த்தி வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு பயிர்க்கன்றுகள் வழங்கி வைப்பு

(சர்ஜுன் லாபீர்)

பத்து லட்சம் மனைப் பொருளாதார அலகுகளை விருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் கல்முனைக்குடி-07, 08 பிரிவு சமுர்த்தி வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு பயிர்க்கன்றுகளும், பயிர்கொட்டைகளும் வழங்கி வைக்கும் நிகழ்வு சமுர்த்தி உத்தியோகத்தர் யூ.எல்.சமட்டின் பிரிவுக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்முனைப் பிரதேச செயலக சிரேஷ்ட சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் பிரதம அதிதியாகவும்
மற்றும் அதிதிகளாக கல்முனைக்குடி சமுர்த்தி வங்கி, வலய உதவி முகாமையாளர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

சமுர்த்திப் பயனாளிகளின் நஞ்சற்ற மரக்கறிச் சுயதேவையினை பூர்த்தி செய்யும் பொருட்டு இத்திட்டத்தினை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.