கோணேசரின் பூஜை

( பொன்ஆனந்தம் )
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் முதலாம் வருட பதவிப்பிராமான நிறைவு  மற்றும் மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களின் 75 வது பிறந்த தினம் ஆகியவற்றை முன்னிட்டு திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தில் நேற்று மாலை விசேட பூஜை வழிபாடுகளை மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்து நடாத்தியது.
 கொரோனா வைரசிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் நோக்கில் இப்பூஜை வழிபாடு திருகோணமலை மாவட்ட  செயலகத்தின்  ஏற்பாட்டில் திருகோணமலை கோணேஸ்வரர் கோயிலில்  இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள,  மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.