மட்டக்களப்பு மாநகர சபையின் துரித வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புளியந்தீவு வாவிக்கரை வீதி 01ல் அமைந்துள்ள குறுக்கு வீதியானது கொங்ரிற் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று (11) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
புளியந்தீவு தெற்கு வட்டார உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களினால் 2020ம் ஆண்டுக்குரிய பாதீட்டு வேலைத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட செயற்திட்டங்களுள் வாவிக்கரை வீதி 01ல் அமைந்துள்ள குறுக்கு வீதி புனரமைக்கும் பணிகள் இன்று முதற்கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார உறுப்பினர் அந்தோனி கிருரஜன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகரமுதல்வர் தி.சரவணபவன், மாநகரசபை உறுப்பினர்களான த.இராஜேந்திரன், ச.கமலரூபன், மாநகர பொறியியலாளர் சித்திராதேவி லிங்கெஷ்வரன், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.