ஜெய ஸ்ரீ மகா போதியில் ஜனாதிபதி வழிபாடு.

ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ இன்று (15) காலை வரலாற்று சிறப்புமிக்க ஜெய ஸ்ரீ மகா போதி முன் மத அனுஸ்டானங்களில் ஈடுபட்டார்.

இன்று காலை, வரலாற்று சிறப்புமிக்க ஜெய ஸ்ரீ மகா போதிக்கு பால் உணவு பிரசாதத்தையும் வழங்கினார். கொரோனா தொற்றுநோயிலிருந்து நாட்டு மக்களும் உலக மக்களும் மீள்வேண்டுமெனவும் பிராதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..