கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலின் நான்கு ஊழியர்களுக்கு கோவிட் -19 வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தாஜ் சமுத்திர ஹோட்டல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு ஊழியர்களும் வெளிப்புறமாக எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஹோட்டல் எடுத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.