அலி சப்ரீ நீதி அமைச்சர் என்ற காரணத்தினால் நாட்டின் சட்டத்தை மாற்றிக்கொள்ள முடியாது – பெங்கமுவே நாலக தேரர்

 

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அலி சப்ரீ நீதி அமைச்சர் என்ற காரணத்தினால் நாட்டின் சட்டத்தை மாற்றிக்கொள்ள முடியாது என தேசப்பற்றுடைய பிக்குகள் முன்னணியின் செயலாளர் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.

அலி சப்ரீ நீதி அமைச்சராக நியமிக்கப்பட்ட போதிலும் சுகாதாரம் உள்ளிட்ட நாட்டின் சட்ட திட்டங்களில் மாற்றம் செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை மண்ணில் புதைப்பதற்கு அனுமதிக்கப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை புதைப்பதற்கு அனுமதிக்கும் தீர்மானத்திற்கு தேசப்பற்றுடைய பிக்குகள் முன்னணி கடும் எதிர்ப்பை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த மக்களின் நலனை கருத்திற் கொண்டு அரசாங்கம் சரியான தீர்மானம் எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வது இஸ்லாமிய மத நம்பிக்கை என்றாலும்கொரோனா போன்ற பயங்கரமான தொற்று நோய் நிலைமையின் போது முஸ்லிம் தலைவர்கள் சற்று நெகிழ்வுத் தன்மையுடன் இருக்க பழகிக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

நீர் ஊற்றுக்கள்கிணற்று நீர் போன்றவற்றை அதிகளவில் பயன்படுத்தும் இலங்கை போன்ற நாடுகளில் இவ்வாறான சடலங்களை அடக்கம் செய்வதனால் அந்த நீர் ஊடாக நோய்த் தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாக பெங்கமுவே நாலக்க தேரர்தெற்கு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.