இன மற்றும் மத பிளவுகளை உருவாக்க யாராவது முயன்றால் அது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும்

ஒரு நாடாக நாம் ஒரு நெருக்கடியில் இருக்கும் நேரத்தில் இன மற்றும் மத பிளவுகளை உருவாக்க யாராவது முயன்றால் அது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்றும், அதை சமாளிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஆனந்த நாயக்க தேரர்  தெரிவித்தார்..

கோவிட் -19 வைரஸால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யலாமா அல்லது அடக்கம் செய்யலாமா என்பது குறித்த முடிவு ஒரு மத சூழலில் அல்ல, சுகாதாரத் துறையால் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின்படி எடுக்கப்பட வேண்டும் என்றார்.