முல்லைத்தீவு மாவட்டத்தில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழையை எதிர்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்

சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழையை எதிர்கொள்வது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலொன்று முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த பருவப்பெயர்ச்சி மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டம் பல்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்த நிலையில் இவ்வாறான அர்த்தம் தொடர்பிலான முன்னாயத்த கலந்துரையாடலாக இந்த கலந்துரையாடல் இடம் பெற்று வருகின்றது
முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் இ.இலிங்கேஸ்வரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் பிரதேச செயலாளர்கள் திணைக்கள தலைவர்கள் குறிப்பாக விவசாய ,நீர்பாசன திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு அனர்த்தம் ஏற்ப்படின் அதை எதிர்கொள்வது தொடர்பிலான கலந்துரையாடல் ஆக இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது