சீனித்தம்பி Brother காலமானார்

மட்டக்களப்பில் அனைவராலும் Brother என அன்போடு அழைக்கப்படும் சிவானந்தா வித்தியாலய தேசிய பாடசாலையின் முன்னாள் விடுதி மேற்பார்வையாளர்  முனைக்காட்டைச்சேர்ந்த பெரியதம்பி சீனித்தம்பி தனது 81வது வயதில் சுகயினம் காரணமாக இயற்கை எய்தினார்.

சிவானந்தாவிடுதியில் இலங்கையில் பலபாகபாகங்களிலிருந்து கல்விகற்ற மாணவர்களுக்கு தந்தைபோன்று விளங்கியவர் மட்டுமல்லாமல் இராமகிருஸ்ணமிசனுடன் நேரடித்தொடர்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.

கிழக்கில் தற்போது பெரும் உயர்பதவிகளில் உள்ளவரர்களையெல்லாம் சிவானந்தாவிடுதியில் அன்போடு அரவணைத்து வளர்த்தவர்.

தற்போது அவரது பூதவுடல் நாவற்குடா சாண்டோ சங்கரதாஸ் வீதியில் வைக்கப்பட்டுள்ளது.

பூதவுடல் நாளை12ம்திகதி நல்லடக்கம் செய்யப்படும்.

தற்போது ஆயிரக்கணக்கான சிவானந்தியன்கள் முகநூல் வாயிலாக அஞ்சலி செலுத்திவருகின்றனர்.