646 கொரனா தொற்றாளர்கள் இன்று குணமடைந்துள்ளனர்.

கோவிட் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  646 பேர் இன்று  முழுமையாக குணமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குணமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், அதன்படி நாட்டில் குணமடைந்த மொத்த கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை 10,183 என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட 4,491 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 14,715 ஆகும்.