காணித்தடையை நீக்கிய திருமலை மேல்நீதிமன்றம்.

பொன்ஆனந்தம்

திரு கோணமலை மாவட்டத்தில் உள்ள குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள விவசாயிகளின் காணிகளுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை திருகோணமலை மேல் நீதிமன்றம்  நேற்று நீக்கி உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பாக நீதிமன்றில் சட்டத்தரணி கேசவன் சயந்தன் அவர்களால் எழுத்தாணை சமர்பிக்கப்பட்டிருந்து. இதனை ஆராய்ந்த மேல்நீதிமன்ற நீதிபதி மா. இளம்செழியன் விவசாயிகள் காணிக்குள் செல்வதற்கு எவரும் தடைபோடக்கூடாது எனஅறிவித்துடன் இவ்வழக்கை வரும் 23.11.2020திகதி எடுத்க்துக்கொள்ளப்படும் என அறிவித்தார்

தென்னமரவடி மற்றும் திரியாய் கிராமங்களில்  ஒரு நூற்றாண்டிற்குக் கூடுதலாகத் தமிழ் மக்கள்வேளாண்மை செய்துவரும் வயல்களில் தொல் பொருள் இருப்பதாகக் கூறி  அண்ணளவாக ஆயிரம் ஏக்கரில்  இம்முறை வேளாண்மை செய்ய விடாமல் தொல்லியல் துறை தடுத்து நிறுத்தி யிருந்து. இவை அனைத்தும் ஆவணங்களைக்கொண்ட விவசாயிகளின் காணிகளாகும் என சட்டத்தரணிகள் மன்றில் சுட்டிக்காட்டினர்

 இத்தடை க்கு எதிராகசமர்பிக்கப்பட்ட எழுத்தாணை மனு மீதான விசாரணையின் போது இத்தடை நீக்கம் அறிவிக்கப்பட்டதாக நீதிமன்றில் பார்வையிட வந்திருந்த சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் எம். பி. தெரிவித்தார்
 திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன் அவர்கள் முன்னிலையில்  நேற்று இவ்விடயம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
திரியாய் மற்றும் தென்னமரவடி மக்கள் தமது சொந்த வயல்களில் விவசாயம் செய்வதை யாரும் தடுக்கக் கூடாது என்று நீதவான் ஆணைபிறப்பித்தார்
. வழக்கு 2020.11.23 ஆம் நாள் மீண்டும்  எடுத்கதுக்கொள்ளப்படும் என மனுதாரர் சார்பில் ஆஜரான
   சட்டத்தரணி கேசவன்தெரிவித்தார்.
எம் ஏ சுமந்திரன்   கேசவன் சயந்தன்  செவ்வி பிரசாந்தி உதயகுமார் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் மன்றில் ஆஜாராகியிருந்தனர்.இங்கு மேலும் பேசிய சுமந்திரன் நான் மன்றில் இவ்விடயத்தை பார்வையிடவே வந்தேன். சயந்தன் போன்ற இளம்சட்டத்தரணிகளே இதில் பங்கு பற்றியிருந்தார்கள்.இதன்மூலம் முதல் வெற்றியையும் பெற்றுள்ளனர். இளம் சட்டத்தரணிகள் ஒன்றிணைக்க முயற்சிக்காகவேநான்  இங்கு இன்று வந்தேன். இது ஒரு எடுத்து காட்டான் விடயம் எனவும் குறிப்பிட்டார்