மாவீரர் தினம் பிள்ளையானால் அனுஸ்டிக்கப்படுமா?

பிள்ளையான் என அழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் இவ்வாண்டு மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கவுள்ளாரா என்ற சந்தேகம் மட்டக்களப்பில் பரவலாக ஏற்பட்டுள்ளது.

இதற்கு காரணம் இன்றுவழக்கிற்காக நீதிமன்றம் அமழைத்துவரப்பட்ட பிள்ளையான் மீண்டும் சிறைக்குள் செல்லும்போது கார்த்திகை 27யை ஞாபகப்படுத்தினார்.இத்தினம் மாவீரர் தினமாகும்.

இதேவேளை இவரின் வழக்கு எதிர்வரும் 24ம்திகதிமீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. சிலவேளை அன்றையதினம் பிணையில்விடுதலையாகி 27ம்திகதி மக்களை சந்திக்கலாம் என்ற அர்த்ததில் சொன்னரோ அல்லது 27ம்திகதி மாவீரர் தினத்தை அனுஸ்டியுங்கள் என ஞாபகப்படுத்தினாரா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில்  தோன்றியுள்ளது.

பிள்ளையான் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட காலம் தொடக்கம் இற்றைவரை எந்தவொரு மாவீரர் தினத்ததையும் இவர் நினைவு கூறவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.