மட்டக்களப்பில் ஆயுள்வேதவைத்தியர், ஆசிரியைக்கும் கொரனா தொற்று.

மட்டக்களப்பில் நேற்று கொரனா தொற்றுக்குள்ளான ஆறு பேரில்  ஒரு வைத்தியரும் ஆசிரியையும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நபர் ஆயுள்வேதவைத்தியர் என தெரிவிக்கப்படுகின்றது.

கோறளைப்பற்று மத்தியில்கடந்த 05.11.2020 மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கணவன் மனைவிக்கு  கொரோனா தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே அவர்களின் மகளுக்கும் மருமகனுக்கும் பேரப்பிள்ளைக்கும் கொரோனா உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நபர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையையடுத்து இவர்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.