வாழைக்காலை சுவாதியம்மன் ஆலயத்தில் விசேட பூசை

(படுவான் பாலகன்) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டிக்கொண்டதற்கமைய இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஒழுங்குபடுத்தலில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட வாழைக்காலை ஸ்ரீ பிள்ளையார் சுவாதியம்மன் ஆலயத்தில் விசேட யாக பூசை வழிபாடு நேற்று(08) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

உலக மக்களைப் பீடித்து இலட்சக்கணக்கான உயிர்களைக் காவுகொண்டுள்ள கொரோனா நோயிலிருந்து மக்களைப்பாதுகாக்க வேண்டி இப்பூசை வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டன.