முதலைக்குடா ஸ்ரீ பாலையடியப்பிள்ளையார் ஆலயத்தில் கொரோனா தொற்று நீங்க விசேட பூசை

(படுவான் பாலகன்) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டிக்கொண்டதற்கமைய இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஒழுங்குபடுத்தலில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட முதலைக்குடா ஸ்ரீ பாலையடியப்பிள்ளையார்; ஆலயத்தில் விசேட யாக பூசை வழிபாடு நேற்று(08) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

உலக மக்களைப் பீடித்து இலட்சக்கணக்கான உயிர்களைக் காவுகொண்டுள்ள கொரோனா நோயிலிருந்து மக்களைப்பாதுகாக்க வேண்டி இப்பூசை வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டன.