கோறளைப்பற்றில் டெங்கு மற்றும் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத் திட்டங்கள்

????????????????????????????????????

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு மற்றும் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துக் காணப்படும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு புகை விசிறல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கானின் வழிகாட்டலில் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு அதிக டெங்கு தாக்கம் காணப்படும் இடங்களிலுள்ள வீடுகளுக்கு டெங்கு புகை விசிறல் நடவடிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் நவம்பர் மாதம் ஏழாம் திகதி வரை டெங்கு நோயினால் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலை மாணவர் ஒருவர் மரணித்துள்ளதாகவும், இந்தவாரம் மாத்திரம் டெங்கு நோயினால் 08 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தெரிவித்தார்.

????????????????????????????????????