மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் ஆறுபேருக்கு இன்று கொரனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் நான்குபேர் ஏறாவூரைச்சேர்ந்தவர்கள் எனவும் இருவர் ஏற்கனவே மட்டக்களப்பு நகரில் தொற்றுக்குள்ளான குடும்பத்தினருடன் தங்கியிருந்த அவர்களது நெருங்கிய உறவினர்கள் என கிழக்கு மாகாண சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
குறிப்பிட்ட குடும்பத்தில் தொற்று ஆறாக அதிகரித்துள்ளது.
குறிப்பிட்ட தொற்றுடன்மட்டக்களப்பில் எண்ணிக்கை 60 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், கிழக்கில் 100 ஆக அதிகரித்துள்ளது.