மட்டக்களப்பு நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு கொரனா தொற்று. எண்ணிக்கை 50

வேதாந்தி

மட்டக்களப்பு நகரில் கொரனா தொற்றுக்குள்ளாகிய நபரின் குடும்பத்தில்  மூன்று பேருக்கு தற்போது கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தொற்றுக்குள்ளான நபரின் 50வயதுடைய மனைவி 16, 14 வயதுடைய இரு பிள்ளைகளுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 20வயது மகனுக்கு  தொற்று உறுதிப்படுத்தப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்டநபர் செங்கலடியில் கடையொன்றில்  கணக்குப்பகுதியில் கடமைபுரிபவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய நிலமையின்படி மட்டக்களப்பில் தாற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் 90ஆக தொற்று உயர்ந்துள்ளதுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.