இன்று மட்டில் 03. இறக்காமத்தில்2 புதிய கொரனா தொற்றுக்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை மூன்று பேருக்கு  கொரனாதொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அதன்படி செங்கலடிப்பிரதேசத்தில் 01, ஏறாவூர்01, கோறளைப்பற்று மத்தி01 பிரதேசங்களைச்சேர்ந்தவர்களே தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளைஇறக்காமம் பகுதியில் கொழும்பின் புத்தக கடை ஒன்றில் பணிபுரிந்து தமது இல்லங்களுக்கு திரும்பியிருந்த இறுதியாக அடையாளப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உள்ளவரின் தந்தையருக்கும் அவரின் சகோதரருக்கும் கடந்த 4ஆம் திகதி பெறப்பட்ட PCR மாதிரிகளின் முடிவுகள் நேற்று இரவு பொசிட்டிவாக கிடைக்கப் பெற்றதை அடுத்து இறக்காமம் பகுதியில் மேலும் இரு நோயாளிகள் அடையாளப்படுத்தப்பட்டு இன்று காலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்படவிருக்கிறார்கள்.
கல்முனைப் பிராந்தியத்தில் மினுவாங்கொடை பேலியகொடை திவுலப்பிட்டிய கொத்தணியில் இதுவரை 20 பேர் கொவிட்19 உள்ளவர்களாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.