மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப்பிரில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப்பிரில் அடையாளங்காணப்பட்ட இருவரில் ஒருவர் ஏற்கனவே பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இரண்டாம் முறை பெறப்பட்டவர் என்றும், மற்றவர் முதன் முறையாக பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டவர் என்றும், இவர்கள் வாழைச்சேனை மற்றும் பிறைந்துரைச்சேனைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிய முடிகின்றது.
இதனையடுத்து, மட்டக்களப்பில் 43 பேரும், திருகோணமலை 13 பேரும், கல்முனை 18 பேரும், அம்பாரையில் 6 பேரும், கொரோனா தொற்றில் இனங்கணப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது