மட்டக்களப்பு நகரில் நீண்டகாலமாக வீடுடைத்து கொள்ளையில் ஈடுபட்ட ஒருவர் கைது

கையடக்க தொலைபேசிகள் மற்றும் அமெரிக்க டொலர் போன்ற பல பொருட்கள் மீட்பு
(கனகராசா சரவணன்
மட்டக்களப்ப்பு நகர் பகுதிகளில் நீண்டகாலமாக வீடுகள் உடைத்து கொள்ளையிட்டு வந்த வாவிக்கரை வீதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்ததுடன் அவரிடம்இருந்து கொள்ளையிட்ட 572 அமெரிக் டொலர், 12 கையடக்க  தொலைபேசிகள், 7 கைமணிக்கூடு, 3 கமரா, மடிகணணி ஒன்று, பவர்பொக்ஸ், வைத்தியர்கள் பயன்படுத்தும் ரெலஸ்கோப் 2, முகமூடி, கையுறைகள், சப்பாத்து மற்றும் வீடு உடைக்க பயன்படுத்தும் உபகரணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாhக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்

கடந்த 29 ம் திகதி மேல்மாடி வீதியில் உள்ள அரச அதிகாரி ஒருவர்  அவரது உறவினர் ஒருவரின் மரணவீட்டிற்கு சென்று 31 ம் திகதி வீட்டிற்குவந்தபோது வீட்டின் யன்னலை உடைத்து இங்கிருந்த 572 அமெரிக்க டொலர் மற்றும் விலைமதிப்புள்ள கைக்கடிகாரம் கொள்ளையிடப்பட்டுள்ளது  தெரியவந்துள்ளது
இதனையடுத்து பொலிசாரிடம் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிசார் பணபரிமாற்றம் செய்யும் கடைகளை தேடி விசாரணையில் ஒருவர் 572 அமெரிக்க டொலரை கடந்த 30 ம் திகதி மாற்றியதாக  கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த கடையின் சி.சி.ரி. கமரா மூலம் கொள்ளையர் தலைக்கவசம் அணிந்து கடையில் பணமாற்றம் செய்துள்ளார்
இதனையடுத்து குறித்த கொள்ளையனை வாவிக்கரையிலுள்ள அவரது வீட்டிவ் கடந்த (01) கைது செய்தனர் இதன்போது அவரிம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பெறுமதியான 7 கை மணிக்கூடுகள் , 12 கையடக்க தொலைபேசிகள் வைத்தியர் பயன்படுத்தும் 2 ரெலஸகோப், 3 கமரா, மடிகளணி ஒன்று, பவர்பொக்ஸ், முகமூடி, கையுறைகள், சப்பாத்து வீடு உடைக்க பயன்படுத்தும் உபகரணங்கள் போன்ற பல பொருட்களை மீட்டனர்
இதன் போது கைது செய்யப்பட்ட கொள்ளையன் பொலிஸ் சப் இன்பெக்டர் ஒருவரின் வீட்டில் இருந்து பொலிஸ் சப்பாத்து மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரனையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நேற்று திங்கட்கிழமை (02) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் எ.சி.ஏ. றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 16 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்