அக்கரைப்பற்றில் தனிமைப்படுத்திய குடும்பத்தினர்களுக்கு உதவ களமிறங்கியுள்ளது அக்கரைப்பற்று மாநகரசபை

நூருல் ஹுதா உமர்.

கோவிட் -19 தொற்று அச்சம் காரணமாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் தனிமை படுத்திய குடும்பத்தினர்களுக்கு முதற்கட்டமாக அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாயல் தலைவரும், அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினருமான எஸ்.எம் சபீஸ் ஊடாக இன்று காலை உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் மரக்கறி கடை உரிமையாளர் சலாம் ஹாஜியார் அவர்களும் இரண்டு வாரங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் அந்த மக்களுக்கு வழங்கி வைத்துள்ளார் இதன் பிற்பாடு ஏதும் தேவைகள் இருந்தாலும் அவர்கள் உதவ தயாராக உள்ளார்கள்  என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் ஏ.கே பாஹிம் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாவுல்லா அஹமட் சக்கி, அக்கரைப்பற்று பதுர் நகரில் தனிமைப்படுத்திய குடும்பத்தினர்களுக்கும் மற்றும் பதுர் வட்டார மக்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக என்னுடன் கூறியுள்ளார். நான் தனிமைப்படுத்திய குடும்பங்களுடன் தொலைபேசி ஊடாக தொடர்பை ஏற்படுத்தி வினவியபோது ஏதும் தேவை இருந்தால் நாங்கள் உங்களை கட்டாயம் தொடர்பு கொள்வோம் என்று பதிலளித்துள்ளார்கள்.  எனவே அவர்களுக்கு உதவிகள் தேவைப்படும் போது உதவ எந்நேரத்திலும் தயாராக உள்ளோம் என்பதுடன் அவர்களுக்கு யாராவது பொதுமக்கள் உதவி செய்வதாக இருந்தால் எங்களை தொடர்பு கொண்டு உங்களது பணிகளை செய்ய முடியும் என்றார்.