சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரநடுகை

யூ.கே. காலித்தீன்

அதிமதேகு ஜனாதிபதி கோத்தபாய  ராஷபகஷ அவர்களின் எண்ணக்கருவில் உண்டான சுபிட்சத்தின் நோக்கு ”நாட்டுக்கு வளரும் ஒரு மரம்”   (ஹெதன ரட்டட வெட்டன கஸக்)   துருலிய லங்கா மரநடுகை வேலைத் திட்ட வாரத்தினை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச  செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரநடுகை  திட்டம் மருதூர் சதுக்கத்தில் இன்று 02.11.2020 திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர்  ஐ.எம். றிக்காஸ்  கலந்து கொண்டதோடு,  கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்களான எம்.வை.எம். ஜஃபா், முஹர்ரம் பஸ்மிர் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டு  மரக் கன்றுகனை நாட்டி வைத்தனர்.

இதன்போது  சாய்ந்தமருது  பிரதேச செலயகத்தின்  உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். அப்துல் ஹமீட்இ கரையோரம் பேனல் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஏ.எச்.எம். றிபாய் உட்பட பிரதேச செயலகத்தின் அதிகாரிகாரிகளும் மற்றும் இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு  மர நடுகையில் ஈடுபட்டனர்.

மேலும் ஜனாதிபதி கோத்தபாய  ராஷபகஷ அவர்களின் கருத்தின் பிரகாரம் இலங்கையின் வனப்பமுதி 30 வீதமாக அதிகரிக்கும் இலக்கை அடையும் நோக்குடன் தனித்துவமான சுற்றுச் சூழல் அமைப்பினை பாதுகாத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய வளப்பயிர்ச் செய்கையின் மேம்பாடுஇ  பராமரிப்பு  மற்றும் பேனுதல் குடியேற்றங்கள் சார்ந்த தாவரங்களை வளர்க்கின்ற வகையில் பங்களிப்பு செய்யும் தாவர இனங்களை  நடுதல்இ அனைத்து மத வழிபாட்டுத் தளங்களிலும்இ அடையாளம் காணப்பட்ட உறுதியான நிலப்பிரதேசங்கள்,  நீா்  பிடிப்பு பகுதிகள் ஆற்றங்கரைகள் போன்ற நெகிழ்வுடன் கூடிய முறைமைகள், தரங்குறைந்த ஏனைய நிலப்பகுதிகள் மற்றும் கரையோரம் போன்ற பசுமை இயல்பினை மேம்படுத்த இந்நிகழ்ச்சித்திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.