நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு அனுமதி

ஜவ்பர்கான்–
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படிஇ சிறைச்சாலை அத்தியட்சகரின் அனுமதியைப்பெற்று மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள முடியுமென நீதிபதி ரீ.சூசைதாஸன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்கான நீதிமன்ற அனுமதி வழங்க கோரிய வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (02) நடைபெற்றது.

இதன்போது சிவநேசதுரை சந்திரகாந்தன் எம்.பி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார்.