கிழக்கு மாகாணத்தில் மூவருக்கு கொரோனா தொற்று இன்று(31) சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவரும் அம்பாறையில் ஒருவருமாக மூவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பகுதியைச் சேர்ந்த 16வயது இளைஞன் ஒருவன் தொற்றுக்குள்ளாமை உறுதிசெய்யப்பட்டது. குறித்த நபர், பேலியகொட மீன்சந்தைக்கு சென்று வந்து கொரோனா தொற்றுக்காரணமாக சிகிச்சை பெற்றுவருபவருடன் தொடர்வை பேணியவர் என தெரியவருகின்றது.
அதேபோன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியிலும் ஒருவர் தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொழும்பிற்கு மேசன் வேலைக்காக சென்று கடந்த நான்கு நாட்களுக்கு முதல் வருகைதந்திருந்த நிலையில், களுதாவளையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். குறித்த நபருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது தொற்றுக்குள்ளானமை சற்று முன்னர் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதே போன்று கல்முனை பிராந்திய சுகாதார பிரிவிற்குட்பட்ட இறக்காமம் பகுதியிலும் ஒருவர் தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.