இலங்கையில் கொரனா 20வது மரணம் பதிவாகியுள்ளது.

இலங்கை தனது 20 வது கொரோனா வைரஸ் தொடர்பான மரணத்தை பதிவு செய்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் நேற்று இறந்த நோயாளியின் பி.சி.ஆர் பரிசோதனையில் நோயாளிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று    தெரிவிக்கப்படுகின்றது.

54 வயதான பெண் உடல்நலக்குறைவால் அக்டோபர் 29 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று சிகிச்சை பெறும்போது அவர் இறந்துவிட்டார், பின்னர் பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது..