ஏறாவூர் நிருபர் எம்ஜிஏ. நாஸர்)
மதுபோதையுடன் மரம் ஏறிய வயோதிப தொழிலாளி சறுக்கிவிழுந்து உயிரிழந்த சம்பவமொன்று மட்டக்களப்பு- வந்தாறுமூலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
வந்தாறுமூலை- பேக்ஹவுஸ் வீதியைச்சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான 60 வயதுடைய கோபால் என்றழைக்கப்படும் சீனித்தம்பி நடராஜா என்பவரே உயிரிழந்தவர்.
https://www.youtube.com/watch?v=dU3PrAiP-mQ
தென்னை மரத்தில்ஏறி தேங்காய் பறித்த பின்னர் இறங்கும்போது கைவழுக்கி தலைகீழாய் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் இவரது சடலம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
தென்னை மரத்தில்ஏறி தேங்காய் பறித்த பின்னர் இறங்கும்போது கைவழுக்கி தலைகீழாய் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் இவரது சடலம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
டாக்டர் கே. சுகுமார் உடல் கூறு பரிசோதனை மேற்கொண்டதையடுத்து திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எஸ்எம். நஸிர் விசாரணைகளை நடாத்தினார்.
பிரேதம் நல்லடக்கத்திற்காக குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிரேதம் நல்லடக்கத்திற்காக குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.