மூதூர் 64ஆம் கட்டைப் பகுதியில் நீண்ட காலமாக இடம்பெற்று வந்த சட்ட விரோத காணி அபகரிப்பினால் பாதிக்கப்படுகின்ற மக்களை 2020/10/26 ஆம் திகதி திங்கள் அன்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நேரில் சென்று சந்திந்த்து கலந்துரையாடினார்
இதன்போது சட்ட விரோத காணி அபகரிப்பு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் ஜபல் நகர் நலன்புரி சங்கத்தினறுக்கு வலுச்சேர்க்கும் முகமாக தேவையான சட்ட மற்றும் நிர்வாக உதவிகளை செய்து தருவதோடு உடனடித் தேவையாக உள்ள மீள் குடியேற்றத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்வது தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அவதானம் செலுத்தினார்.