வெளிப்படையான வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

தொற்றுநோய்க்குப் பின்னர் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் முக்கிய கூறுகளாக இருக்கும் வெளிப்படையான வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடுவதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

தூதரகத்தின் ட்விட்டர் பதிவில், சந்திப்புக்களில் ஜனநாயக சுதந்திரத்திற்கான பொதுவான அர்ப்பணிப்பு குறித்தும் விவாதிக்கப்படும் என்று கூறினார்.

இந்தியாவுக்கு விஜயம் செய்த பின்னர் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் நேற்று மாலை (27) இலங்கைக்கு வந்தார்.