அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக்கேல் ஆர். பாம்பியோவின் வருகைக்கு எதிராக ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) இன்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தியது.
இலங்கைக்கு வரும் பாம்பியோஅரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்..
ஒரு அறிக்கையை வெளியிட்ட ஜே.வி.பி, இலங்கையின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையில் தலையிட அமெரிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகளைக் கண்டிக்கும் வகையில் இந்த போராட்டம் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.