மட்டக்களப்பில் மேலும் 16 கொரனா எண்ணிக்கை 27

மட்டக்களப்பில் இன்று மேலும் 16பேர் கொரனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இவர்களை கரடியனாறு வைத்திசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கிழக்குமாகாண  சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

இதுவரை மட்டக்களப்பில் 27 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இதில் கோறளைப்பற்று மத்தியைச்சேர்ந்த26பேரும்,ஓட்டமாவடிப்பிரதேசத்தைச்சேர்ந்த ஒருவரும் அடங்குகின்றனர்.

இன்னும் பல  பீ.சி.ஆர் பரிசோதனைகள்  நடைபெறுவதுடன்  சம்பந்தப்பட்ட சில நபர்களை கண்டறியும்  நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை இன்று ஓட்டமாவடியில் டெங்கு மரணம் ஒன்றும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.