மட்டு—கல்முனை வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இருவர் படுகாயம்

ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு—கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதியில்இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையல் வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று(25) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி இந்து ஆலயத்திற்கு முன்னால் மட்டக்களப்பு திசையிலிருந்து கல்முனை பக்கமாக வந்த மோட்டார் சைக்கிளும் கல்முனை பக்கமாகமிருந்து  மட்டக்களப்பு திசைய நோககிவந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரு மோட்டார் சைக்கிளகளிலும் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரகைளை மேற்கொண்டுள்ளனர்.