மருதமுனை-பெரியநீலாவணை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று

(ஜெஸ்மி எம்.மூஸா)
மருதமுனை-பெரியநீலாவணை முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது
குறித்த நபர் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புபட்டவர் என சகாதாரப்  பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
கல்முனையைச்  சேர்ந்தவர்களுடன் இணைந்து சென்ற குழுவினருடன் தெழில்  நிமித்தம் இவரும் சென்று வந்துள்ளதாக அறிய முடிகின்றது

கரடியனாறு  சிகிச்சை நிலையத்திற்கு சனிக்கிழமை இரவு இவர்  கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார  பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்
இவருடன் தொடர்புபட்டவர்கள் தொடர்பில் சுகாதாரப் பகுதியினர் அதிக கவனம் செலுத்திவருககின்றனர்;.
கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து இப்பகுதியில்; மனித நடமாட்டம் குறைந்துள்ளதுடன் மக்கள் அசச்சத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது
இவர்;  மருதமுனையின் முதலாவது கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்