காலி பிரதான தபால் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

ஒரு கோவிட் நோயாளி வந்ததாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காலி பிரதான தபால் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

இன்று (23) காலை தபால் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் நிலையத்தை கிருமி நீக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், சுகாதார அறிவுறுத்தல்களின்படி அலுவலகம் மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.