பா.உ அரவிந்தகுமார் தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

அரவிந்தகுமார் எம்பியை தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கனேசன் தெரிவித்தார்.

இன்னும் சற்று நேரத்தில் கூடவுள்ள தமுகூ பாராளுமன்ற குழு இது தொடர்பில் ஆராயும் என தெரிவித்துள்ள அவர்

அரசியல் குழு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் அரவிந்தகுமார் எம்பி, தமுகூ-யிலிருந்து விலக்கப்படுவார் எனவும்

அரவிந்தகுமார் தொடர்பான மேல் நடவடிக்கையை எடுக்குமாறு அவரது கட்சியான மலையக மக்கள் முன்னணி கேட்டுக் கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்..