20ற்கு ஆதரவாக வாக்களித்தால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்.

20 வது திருத்தத்திற்கு எதிராக வாக்குகளைப் பயன்படுத்த முன்னைய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை மீறும் எம்.பி.க்களை கட்சியிலிருந்து வெளியேற்ற  ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.

இன்று (22) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற  கட்சியின் சிறப்புக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பல உறுப்பினர்கள் 20தை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி  வெளியிட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்சியின் முடிவை மீறினால், நிச்சயமாக கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமா பண்டாரா தெரிவித்துள்ளார்